செவ்வாய், நவம்பர் 24, 2015

சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமளவிலாஸ் ஹோட்டலில்,  பிரதமர் மோடிக்கு மசால்தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ . 

                            
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா பகுதியில்
உள்ள பிரபலமான இந்திய ஹோட்டலான, கோமளவிலாசில் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் நேற்று இரவு விருந்தளித்தார்.
இதில் என்ன விஷேசம் என்னவென்றால், தலைவர்கள் இருவரும் அந்த ஹோட்டலுக்கு நேரடியாக சென்று விருந்து உண்டதுதான். 
பிரதமர் மோடி மசால்தோசை, வடை போன்றவற்றை விரும்பி உண்டார். இந்த ஹோட்டலை ராஜ்குமார் என்பவர் நிர்வகித்து வருகிறார்.சிங்கப்பூரில் தமிழர் ஹோட்டலில் மசால் தோசை சாப்பிட்ட மோடி! ( வீடியோ)