புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2015

பாரிஸ் சுற்றி வளைப்பில் காவல்துறையினருக்கு சூடு பலத்த காயம்

அதிகாலை நான்கு இருபதுக்கு பிரான்சின் இரண்டு விசேச படைபிரிவுகள் தாக்குதல் பகுதிக்கு அண்மையில் உள்ள தேவாலயம் அருகே  நிலைஎடுத்திருந்தனர் கட்டிடத்தின் உள்ளே
புக எண்ணிய வேளை ஒரு  தற்கொலை பெண் தீவிரவாதி பாய்ந்து  தன்னை தானே வெடிக்க வைத்தார் இந்த வேளை ஆரம்பிக்கப்பட அதிரடி தாக்குதல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது இரு தீவிரவாதிகள் கொல்லபட்டுள்ளனர் ஐந்து போலீசார் காயம் அடைந்துள்ளனர்  சம்தேகத்தின் பேரில் எழுவர் கைதாகி உள்ளனர் அதிபர் ஒலந்தே மேயர்களை அழைத்து  கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார் இந்த பகுதியில் தமிழர்கள்  அதிகமாக வாழ்ந்து வருவது அறிந்ததே பாரிஸ் சென் டெனிஸ்  Place Jean jaures பகுதியில் காவல் துறை தேடி வரும் தீவிரவாதிகள் இருபபதாகா இன்று அதிகாலை  நான்கரை மணி முதல் சுற்றி வளைத்து தேடுகின்றனர் இந்த
சம்பவத்தின் பொது  கட்டிடம் ஒன்றில் மூவர் பதுங்கி இருபதாகவும் அவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கடும் சந்திய  நிகழ்வதாகவும் அறிகிறோம் காவல்துறையினர் சிலர் இதன்போது காயம் அடைந்துள்ளனர் இந்த சென்ட் டேனிசின் நகர பிதா Didier Pailaard இந்த செய்திகளை உறுதிப் படுத்தி உளார் மக்களை வெளியே வரவோ ஜன்னலினால் எட்டிப் பார்க்கவோ வேண்டாமென அறிவிக்கிறார் பாடசாலைகள் மூடப்படுள்ளது போய்க்குவரத்து தடை செய்யபட்டுள்ளதுமக்கள் பதட்ட நிலையில் உள்ளனர் 

ad

ad