புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2015

பாதாள அறைகளுடன் இலங்கையில் சித்ரவதைக் கூடங்கள்: ஐ.நா.குழு அதிர்ச்சித் தகவல்

இலங்கையில், பாதாள அறைகளுடன் ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை ஐ.நா. குழு நேரில் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போதும் அதற்கு பின்னரும் ஆயிரக்கணக்கானோர்,  காணாமல் போனது பற்றி விசாரிப்பதற்காக, பெர்னார்ட் துகைமே, தே–ஒங் பைக், ஏரியல் துலிட்ஸ்கி ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைத்தது. அக் குழுவினர், தலைநகர் கொழும்பு, கலே, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
காணாமல் போன தமிழர்களின் நூற்றுக்கணக்கான உறவினர்களை சந்தித்துப் பேசினர். ஐ.நா குழுவின் 10 நாள் பயணம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்த பயணத்தின்போது தாங்கள் நேரில் கண்டவற்றை குழுவில் இடம்பெற்றுள்ள ஏரியல் துலிட்ஸ்கி இன்றுதெரிவித்தார்.
கிழக்கு மாகாணம் திரிகோணமலை மாவட்டத்தில் ஒரு கடற்படை தளத்துக்கு உள்ளே மறைவிடத்தில் சட்டவிரோதமாக ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை கண்டுபிடித்ததாகக் அப்போது அவர் தெரிவித்தார். இறுதிக்கட்ட போர் நிறைவடைந்து  ஓராண்டுக்கு பிறகும், அந்த கூடம் இயங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அங்குள்ள பாதாள அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள், அங்குள்ள சுவர்களில் காணப்படுவதாகவும் ஏரியல் துலிட்ஸ்கி தெரிவித்தார். இது போன்ற பல பாதாள சித்ரவதைக் கூடங்கள் இலங்கையில் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து இலங்கை அரசு உறுதியான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.குழுவினர் வலியுறுத்தினர்.

ad

ad