செவ்வாய், நவம்பர் 24, 2015

வடக்கு மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசிக்கின்றனரா? : ஆராய யாழ்.வந்தது நிபுணர் குழு

வடக்கு மக்கள் சுதந்திரமான முறையில் வாழ்கின்றனரா? என்பதனை ஆராய்வதற்கு இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் தெற்காசிய இரு நாடுகளின் பிராந்தியங்களின் நிரந்தர மற்றும் பாதுகாப்புக்களின் நிபுணர் சிமோன் போன்ட் அடங்கிய மூவர் குழுவினர் நேற்று யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தனர்.

இவர்கள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்ததுடன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதில் யாழ்.குடாநாட்டு மக்களின் நிலைமைகள் மற்றும் இயல்பு வாழ்க்கை சுதந்திர நிலைப்பாடுகள், இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள், மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டதாக அரச அதிபர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது சுதந்திரமான நிலைமையினை காணமுடிகின்றது.அதனை நேரில் மக்கள் பார்க்கின்றார்களா? மற்றும் மக்களின் தேவைப்பாடுகள், இளைஞர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து போவதற்காக அவர்கள் வருகை தந்திருந்தார்கள் என அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.