புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2015

குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி?

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள இரு இசையரங்கங்கள், கால்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் கடந்தவாரம் ஐ.எஸ்
. தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை மற்றும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்களில் 130 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பாரிஸ் நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் நிலையங்களுக்குள் ஊடுருவி, குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து மக்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மேனுவேல் வால்ஸ் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் நகரில் குழந்தைகளுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதற்காக நெக்கர் என்ற அரசு மருத்துவமனை இயங்கி வருகின்றது. இங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் முக்கிய ஊழியர்களை நச்சுமிகுந்த ரசாயனங்களின் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க சிறப்பு மேலாடைகள், கையுறை மற்றும் காலணிகள் வாங்கி சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இதுபோன்ற 12 பாதுகாப்பு உபகரணங்கள் சமீபத்தில் திருட்டுப்போனதாக தெரியவந்துள்ளது.
இதைவைத்துப் பார்க்கும்போது, இந்த சிறப்பு உடைகளை அணிந்தபடி, பாரிஸ் நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் முக்கிய நிலையங்களுக்குள் ஊடுருவி, குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து மக்களை கொத்தும், குலையுமாக கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அதற்கு தகுந்தாற்போல், இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரான்ஸ் பிரதமர் மேனுவேல் வால்ஸ், ’இப்போதைக்கு நாம் எதையும் ஒதுக்கிவிட்டு யோசிக்க முடியாது. எந்த நேரத்திலும், ரசாயன ஆயுதம் உள்ளிட்ட எவ்வித தாக்குதலையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் நம்மீது நடத்தக்கூடும் எச்சரித்துள்ளார். இதையடுத்து, பாரிஸ் நகருக்கு தேவையான குடிநீரை வினியோகிக்கும் ஆறு நீரேற்று நிலையங்களைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முக்கிய உயரதிகாரிகள் தவிர இதர பணியாளர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர்.  நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு நெருக்கடி நிலை அமலில் இருக்கும் என பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த புதிய தகவலால் பாரிஸ் நகர மக்கள் மேலும் பீதியடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ad

ad