செவ்வாய், நவம்பர் 24, 2015

யாழ்.பல்கலை. வளாகத்திற்குள் மீண்டும் மாவீரர் நாள் சுவரொட்டிகள்


யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் தமிழீழ மாவீரர் தினத்தை நினைவுகூரும் சுவரொட்டிகள் நேற்றைய தினம் தொடக்கம் மீண்டும் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழீழ மாவீரர் தினம் வருடாந்தம் நவம்பர்-27ம் திகதி நினைவு கூரப்படும் நிலையில் கடுமையான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களால் ஆண்டு தோறும் நினைவு கூரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர்ச்சியாக இவ்வாண்டும் மாவீரர் தினத்தை ஒட்டியதான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.