புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2015

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும்-நீதிஅமைச்சர்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என நீதிஅமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளை; விடுதலை செய்யப்பட வேண்டும் என நேற்று பல கருத்துக்கள் வெளியிடப்பட்ட போதும் இது குறித்து எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை,
இருப்பினும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்வதா அல்லது அவர்களுக்கு புனர்வாழ்வளித்த பின்னர் சமூகமயப்படுத்துவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தற்போது 200 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் சிலரை இரு கட்டங்களாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உளள் அரசியல் சிறைக்கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ad

ad