புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2015

பிரான்ஸ் வாழ் இலங்கையர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு இரத்து


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரான்ஸ் வாழ் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரான்ஸ நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
ஐநாவின் காலநிலை தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காவே ஜனாதிபதி பிரான்ஸ் சென்றுள்ளார்.
21 முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன்று மற்றும் 147 நாடுகளில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தின் போது பாரீஸில், பிரான்ஸ் வாழ் இலங்கையர்களை சந்திக்கவிருந்தார்.
பிரான்ஸ் அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐஎஸ். தீவிரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலை அடுத்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ad

ad