புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2015

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகள் விடுதலை செய்யப்படுவதனை உறுதி செய்ய முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, தற்போது சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் விடுதலை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் கடந்த கால குற்றநச் செயல்கள் தொடர்பில் அது அமுல்படுத்தப்படாது எனவும் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அதன் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3,500 கிலோ­கிராம் ஹெரோயின் போதைப் பொருள் வரு­டாந்தம்  இலங்­கைக்குள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தாக புல­னாய்­வுப்­பி­ரிவு
நடத்­திய ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது. இதே­வேளை, போதைப்­பொருள் பரி­மாற்றல் நட­வ­டிக்­கைகள் வடக்கு பிர­தேச கரை­யோ ­ர­மா­கவே மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­படும் 3,500 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளில் 1,000 கிலோகிராம் இலங்­கையின் பல பிர­தே­சங்­க­ளுக்கும் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கின்­றன. ஏனையவை  இங்­  கி­ருந்து வெளி­நா­டு­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கி­றது.
எனவே ஹெரோயின் போதைப்பொருள் வெளிநா­டு­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்கும் மத்­திய நிலை­ய­மாக இலங்கை விளங்­குவதாகவும் குறித்த ஆய்வின் மூலம் தெரி­ய­வ­ரு­கி­றது. இந்நிலையில் 52 நாடு­களின் உத­வி­களைப் பெற்று இலங்­கையில் செயற்படும் போதைப்­பொருள் வலை­ய­மைப்பை முறி­ய­டிப்­ப­தற்கு நட­வ­டிக்கைள் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக கடற்­படைத் தள­பதி தெரி­வித்­துள்ளார்.

ad

ad