புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2015

பாரீஸ் தாக்குதல் தீவிரவாதிகளை காட்டி கொடுத்து உயிர் தியாகம் நாய்


 பாரிசில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் வெடிகுண்டுடன் இருந்த பெண்தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸ் நாய் டீசலை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 இடங்களில் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். தாக்குதலில் தொடர்பு உடைய தீவிரவாதிகளையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தேடும்பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு உள்ளது. 

பாரீஸ் புறநகர் பகுதியான செயின்ட்-டெனிஸில் அதிகாலை தீவிரவாதிகளை தேடுதல் வேட்டையில் பிரான்ஸ் போலீஸ் படை ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். 

தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்திற்கு முதலில் 7 வயதுள்ள டீசல் என்ற நாயை அனுப்பினர். அவர்கள் இருப்பது உறுதி செய்தவுடன் டீசல் குறைக்க தொடங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் நாயை சுட்டு கொன்றனர். பின்னர் கட்டிடத்தில் புகுந்த போலீசார் 3 தீவிரவாதிகளை சுட்டு கொன்றனர். தீவிரவாதிகளை காட்டி கொடுத்து உயிர் தியாகம் செய்த போலீஸ் நாயின் செயல் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

ad

ad