செவ்வாய், நவம்பர் 24, 2015

https://www.facebook.com/Sooriyan.FM.SriLanka/videos/942962769085751/கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றன. இதனால் பல குளங்கள் ஏற்கனவே வான் பாய்ந்துள்ள நிலையில் தற்போது இரணைமடு குளத்தின் கொள்வனவான 34 அடியில் 28 அடிக்கு நீர் நிரம்பி உள்ளமையால் அதன் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
வான்கதவுகள் திறக்கப்பட்டு உள்ளதனால், ஊரியான், பன்னங்கட்டி , வெற்றிலைக்கேணி , கட்டைக்காடு , வெலிக்கண்டல் , கேவில் , ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.