புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2015

துருக்கி ராணுவத் தாக்குதலில் 115 குர்து கிளர்ச்சியாளர்கள் சாவு

துருக்கியில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையில் 115 குர்து கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்ததாக
அந்த நாட்டு அரசு தெரிவித்தது.
 இதுகுறித்து அரசுக்குச் சொந்தமான "அனடோலியா' செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:
 குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளில் 115 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர்.
 சிஸ்ரே மற்றும் சிலோபி நகரங்களில்தான் அதிக அளவாக 98 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
 மர்டின் மற்றும் தியார்பக்கீர் பகுதிகளில் 17 பேர் உயிரிழந்தனர் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
 அந்தப் பகுதிகளில் இந்த மாதம் 15-ஆம் தேதி முதல் ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 சாலைகளில் கண்ணிவெடிகளைப் பொருத்தியும், பதுங்கு குழிகள், சாலைத் தடைகளை ஏற்படுத்தி, குர்து கிளர்ச்சியாளர்கள் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதால், அவர்களுக்கு எதிரான தாக்குதல் நிகழ்த்தப்படுவதாக துருக்கி அரசு கூறி வருகிறது.
 இதுகுறித்து அதிபர் தாயிப் எர்டோகன் திங்கள்கிழமை கூறுகையில், ""பயங்கரவாதிகள் வெட்டி வைத்துள்ள பதுங்கு குழிகளை அவர்களது புதைகுழிகளாக மாற்றும் வரை ஓய மாட்டோம்'' என்றார்.
 குர்துகளுக்காக தனி நாடு கோரி, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி கடந்த 1984-ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கியது.
 தற்போது தனி நாடு கோரிக்கையைக் கைவிட்டாலும், துருக்கியின் மிகப் பெரிய சிறுபான்மையினரான குர்துக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் கேட்டு அந்த அமைப்பு கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
 30 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் இந்தப் போராட்டத்தில் 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

ad

ad