புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2015

வரலாறு காணாத வகையில் சென்னையில் 118 சென்டி மீட்டர் மழை 107 ஆண்டு கால சாதனை முறியடிப்பு


வடகிழக்கு பருவமழை யின் தீவிரம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.சென்னையில் 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.

கடந்த 8-ந்தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு  பெய்தது. தீபாவளிக்கு பிறகு பலத்த மழை கொட்டியது. பின்னர் கடந்த 23-ந்தேதி  மிக கனமழை பெய்தது.

குறைந்த  காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று முன்தினம் இரவில் இருந்து மழை தொடங்கியது. நேற்று மாலையில் இருந்து விடிய விடிய மழை பெய்தது.
நவம்பர்  மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. 100 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1-ந்தேதி முதல் நேற்று (30-ந்தேதி நள்ளிரவு 12 மணி) வரை சென்னையில் 118 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது வரலாற்று சாதனை யாகும்.
இதற்கு முன்பு 1918-ம் ஆண்டு  சென்னையில் நவம்பர் மாதத்தில் 108.8 சென்டி மீட்டர் மழை பெய்து இருந்தது.  இதன்மூலம் 107 ஆண்டு கால  சாதனை முறியடிக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் (நவம்பர்) மட்டும் மீனம்பாக்கத்தில் 118 செ.மீட்டர்  மழையும், நுங்கம்பாக்கத்தில் 105 செ. மீட்டர் மழையும் பதிவாகி இருந்ததாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடைசியாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் மாதத்தில் 97 செ.மீட்டர் மழை பெய்து இருந்தது. 1985-ல் இந்த அளவு மழை பதிவாகி இருந்தது.

ad

ad