புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2015

வரலாறு காணாத வகையில் சென்னையில் 118 சென்டி மீட்டர் மழை 107 ஆண்டு கால சாதனை முறியடிப்பு

















நேற்று நள்ளிரவில் இருந்து சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியது. இன்று காலையில் மழை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

இதனால் ஒரு வாரத்துக்கு பின்னர் மீண்டும் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறியது. குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் தண்ணீர் சூழ்ந்தது. மழை பாதிப்பில் இருந்து கொஞ்சம் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்த சென்னை வாசிகளை இந்த மழை மீண்டும் புரட்டிப் போட்டது.கோயம்பேடு, ஆழ்வார் திருநகர், வேளச்சேரி, மடிப்பாக் கம், பள்ளிக்கரணை உள் ளிட்ட அனைத்து பகுதி களிலும் வெள்ளம் தேங்கி யது. மின்சாரமும் துண்டிக் கப் பட்டது.

இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் சாலை களில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கின.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து சாலைகளுமே வெள்ளத்தில் மிதந்தன.

கிண்டி கத்திப்பாரா பாலம் அருகில் உள்ள ஐ.டி. நிறுவனங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு பணிபுரிந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்தே அலுவலங்களுக்கு சென்றனர்.கிண்டி சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம் ஆகிய வற்றிலும் வெள்ளம் தேங்கி யது. கவர்னர் மாளிகை யையட்டிய சாலை யிலும் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்த வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளும் மீண்டும் வெள் ளத்தில் மூழ்கின. தரமணி டைடல் பார்க் எதிரில் சாலை யில் திடீர் நிரூற்று ஏற்பட் டது. இதனை பொது மக்கள் மிரட்சியுடன் பார்த்துச் சென்றனர்.

தாம்பரத்தில் இருந்து மீனம்பாக்கம் செல்லும் சாலைகளில் வெள்ளம் தேங்கியிருப்பதால் சாலைகள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சிந்தாதிரி பேட்டை போலீஸ் நிலையம் அருகில் மழை வெள்ளத்தில் மின் சாரம் பாய்ந்ததால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.சென்னையில் இன்று காலையில் கொட்டித் தீர்த்த கனமழையால், கடந்த 23-ந் தேதி ஏற்பட்டது போன்றே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. வாகன ஓட்டிகள் 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க பல மணி நேரம் ஆனது. மழை வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை வாசிகளின் இயல்பு வாழ்க்கை மீண்டும் வெகுவாக பாதிக் கப்பட்டது. 

ad

ad