புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2015

கனமழையால் தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இழப்பு

மிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக 15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக  'அசோசாம்' அமைப்பு
தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து கடந்த பல நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை நகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகிறது. 

வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு  நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் உதவிக்கரம் நீண்டுள்ளது. சென்னையில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்,  இந்த மழையால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களும் பலத்த மழையில் சிக்கித் தவிக்கிறது. ஏராளமான பொது சொத்துக்களும் சேதமாகியுள்ளது. பொதுமக்கள் வீடு, வாசல்களை இழந்துள்ளனர். 

இந்நிலையில் 'அசோசாம்'  ( ASSOCHAM -  The Associated Chambers of Commerce and Industry of India ) எனப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு,  தமிழகத்தில் ஏற்றட்ட வெள்ளத்தினால்  15,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 
இந்த அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசு தமிழகத்துக்கு ஆயிரம் கோடி நிதியுதவியை உடனடியாக அளித்துள்ளது. அதோடு கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களும் தமிழகத்துக்கு நிதியுதவி அளித்துள்ளன. 

ad

ad