புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2015

இடம்பெயர்ந்தவர்களுக்காக 16 ஆயிரம் வீடுகள்! மூன்று லட்சம் பேருக்கு நன்மை: ஐரோப்பிய ஒன்றியம்


ஐரோப்பிய ஒன்றியத்தின் 14 மில்லியன் யூரோ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டத்தின்கீழ் சுமார் மூன்று லட்சம் பேர் வரை நன்மை பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் 2016- 2018வரை மேற்கொள்ளப்படவுள்ளன.
உள்ளக இடப்பெயர்வுகளுக்காக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட்டெலி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சித்திட்டம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேல்ட்விசன் ஸ்ரீலங்கா அமைப்புடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக 16ஆயிரம் வீடுகள் வரை அமைக்கப்படவுள்ளதாக டெலி தெரிவித்துள்ளார்.
குறித்த வீடமைப்பு திட்டத்துக்கான உடன்படிக்கை கைச்சாத்திடல் நிகழ்வின்போதே டெலி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ad

ad