புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2015

1990ம் ஆண்டில் காணாமல்போனோரின் சடலங்கள் இருக்கின்றமை உறுதி: பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் காணாமல்போயுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மண்டைத்தீவு, அல்லட்பிட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி முதல் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த பகுதிகளிலிருந்து சுமார் 150 இளைஞர்கள் வரை அழைத்து செல்லப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 70 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் சி.சிறீதரன் நினைவூட்டினார்.
இந்த விடயம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
காணாமல் போனோர் விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தான் இந்த விடயங்களை பாராளுமன்ற முன்னிலைக்கு கொண்டு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு காணாமல் போனோரின் சடலங்கள் மண்டைத்தீவு செம்மன்தீவு கிணறுகளிலும், மண்டைத்தீவு கிறிஸ்தவ தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இதன்பிரகாரம், குறித்த பகுதி அகழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த பகுதிகள் இராணுவத்தினரால் கொங்கிறீட் இடப்பட்டு மறைக்கப்பட்டுள்ளமையின், ஊடாக இந்த சடலங்கள் இந்த பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளமை உறுதியாவதாக சிறீதரன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
அப்போதைய இராணுவ தளபதி கொப்பேகடுவ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்த விடயம் குறித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை 

ad

ad