புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

தமிழ் மக்கள் பேரவையின் 2ம் அமர்வு முடிவடைந்தது! 2016 மார்ச் இறுதியில் பேரவையின் தீர்வு முன்மொழிவு வெளியிடப்படும்

tpc
தமிழ் மக்கள்  பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரானது இன்று(27)  யாழ்.பொதுநூலகக் கேட்போர்
கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற சர்ச்சைக்கு மத்தியில் இன்று கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
tamil_forum_viki_005
இதில் புதிய அரசினால் உத்தேசிக்கப்பட்டுள்ள ஐனாதிபதி முறைமை ஒழிப்பு ,  மற்றும் புதிய தேர்தல் சட்ட முறை சம்பந்தமான விடயங்கள்  தேசிய இனப்பிரச்சனைக்கான  தீர்வு போன்ற விடயங்களில் தமிழ் மக்களின்  அபிலாசைகள் தேவைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு  தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கவேண்டிய  தீர்மானங்கள்,  சட்ட வாக்க முறையில் தேவையான கொள்கைப் பிரகடனம் தொடர்பிலும்  ஆராயப்பட்டுள்ளன.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முன்தினம்(25) தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களையும் , நேற்று (26) நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தினையும்    அவசரமாக சந்தித்திருந்த நிலையில் இந்த இரண்டாவது கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றிருந்தது .
இதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் , அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் சார்பில் துணைத்தலைவர் கேசவன்,  பல்கலைக்கழக ஊழியர் சங்கம் , பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் சிவில் அமைப்பினர்கள்,  தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் தமிழரசுக்கட்சியின் துணைத்தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் பேரவையில் அங்கம் வகிக்கின்றார் . ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேரவை நியமித்த நிபுணர்குழுவுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆயினும் இன்றைய அமர்வில் ரெலோ சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை.
இன்றைய கூட்டத்தில் முக்கியமாக அரசியல் தீர்வு நகல் வரைபிற்காக 15 பேர் கொண்ட அரசியல் சபை உருவாக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தரப்பு உள்ளிட்ட பேரவை உறுப்பினர்களான அரசியல்கட்சிகள்  தரப்பில் 10 பேரும் மிகுதி 5 பேர் சிவில் சமூகத்தில் இருந்தும் தற்போது இடம்பெறுகின்றனர்.
அரசியல் சபை முதலாவது கூட்டம் சனவரி 3ம்திகதி நடைபெறும் . சனவரி 23ம் திகதி திட்ட முன்வரைபை பேரவைக்கு சமர்ப்பிப்பர் . 30ம் திகதி பேரவை கூடி ஆராய்ந்து அதனை மக்களுக்கு வெளிப்படுத்தும். அதன்  பின் நடைபெறும் ம்க்கள் கருத்தாடல்களின் மூலம் வரைபு இறுதி செய்யப்பட்டு மார்ச் இறுதியில் திட்ட வரைவு முன்மொழிவு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பேரவைக்கு சகலருடைய ஒத்துழைப்பும் தேவை. ஆகையினால் எவரையும் தனித்து விடவோ?, வேண்டாம் என்று சொல்லவோ? தமிழ் மக்கள் பேரவை கோரவில்லை. அதனால் தழிழ் மக்களுடைய  நலன் கருதி எங்களுடைய கொள்கையில் உறுதியாக இருப்போம். இந்த கோட்பாடுக்கு இணங்க இவ் அமைப்பின் ஊடாக சேர்ந்து கைகோர்க்கும் அனைவரையும் ஒன்றினைத்து புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற அனைவரும் ஒன்றிணைந்து முன்வரவேண்டும்
தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை  ஏற்றுக் கொண்டவர்களை நாங்கள் வரவேற்கின்றோம். இதில் சுமந்திரன் வரவேண்டும் என்று கூறினால் அவரையும் வரச்சொல்லுவோம். இதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. எங்களுக்கான கொள்கைகள் இருக்கின்றன.  தமிழ் மக்களுடைய எதிர்கால சிந்தனையிருக்கின்றன. அதே சிந்தனையில் இருப்பவர்கள் இந்த பேரவையில் வந்திருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்..
கடந்த 19.12.2015 அன்று முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்றய கூட்டத்தொடர் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.thx ejaffna 

ad

ad