புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2015


புங்குடுதீவின் அனைத்து உறவினர்களுக்கும் உளம் கனிந்த வணக்கம். புங்கையின் புதிய ஒளி அமைப்பை எம் உற்ற உறவினர் ஒருவர் அவசரப்பட்டு சந்தேகப்பட்டு முக நூலில் பதிவு ஏற்றியுள்ளார். உலகமே கிராமமாகிப்
போன இந்த காலத்தில் தொடர்பாடல் இலவசமாகிப்போன இன்றைய நாளில் தீர விசாரிக்காமல் எம்மை சந்தேகப் படுவது மிகவும் மனவருத்தத்தை அளிக்கின்றது.
புங்குடுதீவின் புதிய ஒளி முழுக்க முழுக்க 20 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான அமைப்பு ஆகும். இது மாணவர்களுக்காக மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகத்தில் 20 வயதிற்குட்பட்டவர்களே அதாவது 1996 ஆம் ஆண்டும் அதன் பின்னும் பிறந்த மாணவர்களே உறுப்பினராக இருக்க முடியும்.
18/12/2015 விளையாட்டு மைதானத்தில் கனவாக உருக்கொண்டு 20/12/2015 அன்று கோவில் வீதி ஓரத்தில் அமைப்பாக தோற்றம் பெற்றுள்ளது. வெளினாட்டில் வசிக்கும் ஒரு ஆலோசகர், நாங்கள் ஐவர் மட்டுமே முதல் நாள் அங்கத்தவர்கள். 21/12/2014 நாம் நால்வர் சேர்ந்து பிரதேச செயலர், சமூக சேவை உத்தியோகத்தர், கல்விப்பணிப்பாளர் என்போரை வேலணையில் அவரவர் அலுவலகங்களில் சந்தித்து எம்மையும் எமது கனவுகளையும் அறிமுகப்படுத்தி ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டோம். புங்குடுதீவு மண்ணில் ஒரு சிறுவர் அமைப்பு அரசாங்க படி ஏறி ஆலோசனை பெற்று வந்தது நாமாகத்தான் இருப்போம் என்று நினைக்கின்றோம்.
புங்கையின் புதிய ஒளியை சமூக அமைப்பாக கட்டியெழுப்பும்படி ஆலோசனை கூறி அவர்கள் உதாரணத்திற்கு சில ஆவணங்களைத்தந்து அதில் உள்ளபடி எம்மையும் தயார்படுத்தும் படி கூறி மகிழ்வுடன் வழி அனுப்பி வைத்தனர்.
புங்கையின் புதிய ஒளி அமைப்பை அரசில் முறைப்படி பதிய முதல் எங்கள் அமைப்பு திறம்பட இயங்குகின்றது என்பதை அரச அதிகாரிகளுக்கு நிரூபிக்கும் படி 6 மாதக் காலக் கெடுவுடன் நிபந்தனை விதித்துள்ளனர். எமது வெற்றியை தம் மனம் குளிர காண விரும்புவதாகவும் தனது பெரும் அவாவை கல்விப்பணிப்பாளர் வெளிப்படுத்தினார்.
இன்று 22/12/2015 தொடங்கி அனைத்து பாடசாலை மாணவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி தை மாதத்தில் இடைக்கால நிர்வாக சபையை கலைத்து 2017 ஆம் ஆண்டிற்கான நிர்வாகத்தை தெரிவு செய்து இயங்க திட்டம் இட்டுள்ளோம். தொடர் அனுபவங்கள் ஊடாக அறிவைப் பெற்று அதனடிப்படையில் யாப்பு தயாரித்து 6 மாதங்களின் பின் அரச அதிகாரிகளின் நிபந்தனைகளை வென்று அமைப்பை பதிவு செய்வோம்.
கடந்த காலங்களில் நாம் தற்முனைப்போடு மரனடுகை வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இருந்தோம். அந்த அனுபவங்களோடு எம் பணியை மேலும் விரிவாக்குவோம்.
அதுவரையில் பொறுமையுடன் எமது செயற்பாடுகளை விழிப்புடன் அவதானித்துக் கொண்டிருக்கும் படி மிகத்தாழ்மையுடன் நாம் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் என்ற உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம் .
நன்றி.

ad

ad