புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2015

சென்னை வெள்ளத்தில் இருந்து 28 ஆயிரம் பேர் மீட்பு; 27 லாரிகளில் உணவு, குடிநீர் பாட்டில்களை அனுப்பியது மத்திய அரசு

மேலாண்மைக்குழுவின் மறு ஆய்வுக் கூட்டம் அந்தக்குழுவின் தலைவர் பி.கே. சின்ஹா தலைமையில் இன்று நடந்தது. இதில்,
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடந்து வரும் நிவாரண மற்றும் மீட்பு பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் சென்னையில் சில இடங்களில் வெள்ளநீர் வடிய துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மத்திய அரசு அனுப்பியிருந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் முப்படை வீரர்கள் குழுவும் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்டுள்ளது. மீட்பு பணியில் 50 தேசிய பேரிடர் மீட்புக்குழுவும், 13 ராணுவ குழுக்களும் களத்தில் உள்ளன. தற்போது மீட்பு பணியை காட்டிலும் நிவாரண பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 27 லாரிகளில் உண்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள உணவுகள், 4 லட்சம் குடிநீர் பாட்டில்கள் உட்பட மற்ற நிவாரண பொருட்களையும் மத்திய அரசு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ad

ad