புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2015

2.8% வித்தியாசத்தில் அ.தி.மு.க., தி.மு.க: ‘முதல்வரை’ மீண்டும் தீர்மானிப்பாரா விஜயகாந்த்!?

ட்டமன்றத் தேர்தலுக்குத் தமிழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. கட்சிகளும் கிட்டத்தட்ட களத்தில் குதித்துவிட்டன. அணிகள்
உருவாவதற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நிறைய அம்சங்கள் உண்டு. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க இன்னும் கூட்டணி அமைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.  

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும்தான் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்றன. ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலை எல்லாக் காலங்களிலும் உண்டு. அப்படிப்பட்ட சூழலில் தேர்தல் நெருக்கத்தில் ஆளும் கட்சியை எதிர்க்கக்கூடிய ஒரு வலுவான கூட்டணி உருவாகிவிடும். ஆனால், தேர்தலுக்கு ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் எதிர் தரப்பில் ஒரு வலுவான கூட்டணி அமையாதது ஆளும் கட்சிக்கு ஒரு பிளஸ்.

ஆளும் கட்சியான அ.தி.மு.க மீது கடும் அதிருப்தி இருக்கிறது. ஆனால், அதற்கு வடிகாலாக ஓர் அணி அமைய தி.மு.க சரியான சாய்ஸ் இல்லை என்கிற நிலை நிலவுகிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், ‘நமக்கு நாமே’ எனச் சொல்லி ஒருகட்ட பிரசாரத்தை முடித்து விட்டது தி.மு.க.
தேர்தல் நெருங்குவதற்கு முன்பே யார் யார் எந்த எந்த அணியில் இருப்பார்கள் என்கிற பிக்சர் கிட்டதட்ட தெரிந்துவிடும். ஆனால், பிரதான எதிர்கட்சியான தி.மு.க அணியில் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய கட்சிகள் சேரவில்லை. விஜயகாந்த் எங்கே போவார் என்பதும் சஸ்பென்ஸாக இருக்கிறது.
இந்தச் சூழலில் 32 மாவட்டங்களில் ஜூ.வி. ஒரு ஸ்பெஷல் சர்வே நடத்தியது. ’வரும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்?’ என்பதுதான் கேள்வி.
சர்வே முடிவில் ஆச்சரியங்களை எதிர்பார்த்தால், அதிர்ச்சியே காத்திருந்தது. தி.மு.க., அ.தி.மு.க இடையிலான சொற்ப வித்தியாசம், ஆளுங்கட்சியைத் தீர்மானிக்கும் யாருமே கணிக்க முடியாத ‘மூன்றாவது அணி’, வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கேப்டனின் வாக்கு வங்கி என ஆச்சரியங்கள் அன்லிமிடட்.

ad

ad