புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

30 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார் கப்டில்: இலக்கை எட்டியது நியூஸிலாந்து


இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி வெற்றி கண்டது நியூஸிலாந்து.
118 ரன்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு நியூஸிலாந்து அணி 50 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டது.
 முதலில் பேட் செய்த இலங்கை அணி 27.4 ஓவர்களில் 117 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் 30 பந்துகளில் 8 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் சேர்க்க, 8.2 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
 கிறைஸ்ட்சர்ச் நகரில் திங்கள்கிழமை நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்துவீச, அதை சமாளிக்க முடியாமல் ஆட்டம் கண்டது இலங்கை. தில்ஷான் 7, திரிமானி 1, குணதிலகா 17, சன்டிமல் 9, கேப்டன் மேத்யூஸ் 17 என அடுத்தடுத்து வெளியேற, அந்த அணி 56 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்ரீவர்த்தனா-கபுகேதரா ஜோடி 25 ரன்கள் சேர்த்தது. அவர்கள் இருவரும் தலா 12 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்தவர்களில் குலசேகரா மட்டும் 19 ரன்கள் எடுத்தார். இதனால் 27.4 ஓவர்களில் 117 ரன்களுக்கு சுருண்டது இலங்கை.
 நியூஸிலாந்து தரப்பில் மட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், மெக்லீனாகான் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
 கப்டில் விளாசல்: பின்னர் பேட் செய்த நியூஸிலாந்து அணியின் இன்னிங்ûஸ மார்ட்டின் கப்டிலும், டாம் லேத்தமும் தொடங்கினர். சமீரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் கப்டில் கொடுத்த கேட்ச்சை ஸ்ரீவர்த்தனா கோட்டைவிட, அது பவுண்டரியானது. 
 இதனால் வாழ்வு பெற்ற கப்டில், குலசேகரா வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளையும், சமீரா வீசிய 3-வது ஓவரில் 3 சிக்ஸர்களை, இரு பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். இதனால் முதல் 3 ஓவர்களில் 56 ரன்களை எட்டியது நியூஸிலாந்து. தொடர்ந்து வேகம் காட்டிய கப்டில் 17 பந்துகளில் அரைசதம் கண்டார். இதன்பிறகு வான்டர்சே வீசிய 6-வது ஓவரை எதிர்கொண்ட கப்டில், அதில் 3 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். இதனால் 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது நியூஸிலாந்து. கப்டில் 30 பந்துகளில் 93, டாம் லேத்தம் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 மார்ட்டின் கப்டில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
துளிகள்...
 250 - நியூஸிலாந்து அணி 250 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 7-வது பெரிய வெற்றியை (பந்துகள் மீதமிருந்ததன் அடிப்படையில்)பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து. 
 3 - ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 250 அல்லது அதற்கு அதிகமான பந்துகள் மீதமிருந்த நிலையில் நியூஸிலாந்து அணி இலக்கை எட்டுவது இது 3-வது முறையாகும்.
 14.16 - இந்தப் போட்டியில் நியூஸிலாந்தின் ரன் ரேட் 14.16 ஆகும். ஒரு நாள் கிரிக்கெட் கிரிக்கெட் வரலாற்றில் இது 2-வது பெரிய ரன் ரேட் ஆகும். முதல் பெரிய ரன் ரேட்டும் நியூஸிலாந்து வசமே உள்ளது. வங்கதேசத்துக்கு எதிராக 6 ஓவர்களில் 94 ரன்கள் என்ற இலக்கை எட்டியபோது அதன் ரன் ரேட் 15.83. ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் 4 பெரிய ரன் ரேட்களும் நியூஸிலாந்து வசமே உள்ளது.
 39 - இந்த ஆட்டத்தில் 39 பந்துகளில் 100 ரன்களை எட்டியது நியூஸிலாந்து. 2002-க்குப் பிறகு ஓர் அணி அதிவேகமாக 100 ரன்கள் எடுத்த ஆட்டம் இதுதான். 
 17 - மார்ட்டின் கப்டில் 17 பந்துகளில் அரை சதமடித்தார். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இது 2-வது அதிவேக அரை சதமாகும். தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 16 பந்துகளில் அரை சதம் கண்டதே இன்றளவும் சாதனையாக உள்ளது. 
 1 - அதிவேக அரை சதமடித்த நியூஸிலாந்து வீரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் கப்டில். முன்னதாக 2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக மெக்கல்லம் 18 பந்துகளில் அரை சதமடித்ததே சாதனையாக இருந்தது.
 310 - இந்த ஆட்டத்தில் கப்டிலின் ஸ்டிரைக் ரேட் 310. ஒரு நாள் கிரிக்கெட்டில் 50-க்கும் அதிகமான ரன் எடுக்கப்பட்டதில் இது 2-வது பெரிய ஸ்டிரைக் ரேட் ஆகும். முதல் பெரிய ஸ்டிரைக் ரேட் டிவில்லியர்ஸ் வசம் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 44 பந்துகளில் 149 ரன்கள் குவித்தபோது டிவில்லியர்ஸின் ஸ்டிரைக் ரேட் 338.63.

ad

ad