புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

பிரியாணியும் 500 ரூபாயும் கொடுத்து மக்களை ஏமாற்றிய கும்பல்

இரணைமடு குளத்து நீரை காப்போம் என்கின்ற அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு கடந்த வாரம் கிளிநொச்சியில் இரகசியமாக இடம்பெற்றதாக
அரசியல் வட்டாரங்களிடையே தற்போது செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.பத்தி எழுத்தாளர் நிலாந்தனின் தலைமையிலும் வன்னி மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பின்புலத்திலுமே இவ் அமைப்பானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இரணைமடு குளத்து நீரை யாழ் குடாநாட்டிற்கு கொண்டுசெல்வதை அனுமதிக்க முடியாது என்கின்ற தொனியில் இவ் அமைப்பு உருவாக்கப்பட்டாலும் இதன் பின்புல நாடாளுமன்ற உறுப்பினரின் நோக்கத்தை நிறைவேற்றுவதே அமைப்பினதும் நிலாந்தனின் கடமையாக அமையுமென எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்ப்பட்ட நிலையில் அதனை வலுவிழக்கச்செய்யும் நோக்கிலும் வன்னி மாவட்டத்தில் தனக்குசார்புடைய அமைப்பொன்றினை உருவாக்குதல் மற்றும் கூட்டமைப்பு பிளவடைந்து நலிவடையும் நிலையில் தனது நிலைப்பிற்கு சாதகமான நிலைமையை உருவாக்குவதே குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் நோக்கமென தமிழ் ஆர்வலர்கள்
விசனம் தெரிவித்துவருகின்றனர்.
கிளிநொச்சியிலுள்ள கன்னியர் மடமொன்னிறின் மேல் உள்ள மாடி ஒன்றில்  இரகசியமாக அங்குரார்பணம்
செய்யப்பட்ட இவ் அமைப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் சுமார் ஐம்பதுபேர் கலந்துகொண்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
கூட்டமைப்பினூடாக நாடாளுமன்ற ஆசனத்தை பெறுவதென்பது எதிர்காலத்தில் கடினமானதொன்றென அறிந்துள்ள  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது ஆதரவூகளை பலப்படுத்தும் முகமாக அமைப்புக்களையும் குழக்ளையும் உருவாக்கும் தமிழகத்தின் அரசியல் பாணியை பின்பற்றி வரும் நிலையில் அதற்கு ஒருபடிமேல்
சென்று அங்குரார்பண நிகழ்வில் கலந்தகொண்டவர்களுக்கு பிரியாணியும் ஐந்நூறு ரூபாய் காசும் வழங்கியிருக்கிறார் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் கேவலமான விடயமே.
யாழ்ப்பாண விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயக்கம் காட்டுவதும் நாடகம்மாடுவதும் ஏன் என்பதும் கேள்விக்குறியே?

ad

ad