புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2015

புதிய தலைநகர் அமராவதியில் 7,500 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்: ஆந்திர அரசு திட்டம்

ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள புதிய தலைநகர் அமராவதியில் மாபெரும் சர்வதேச விமான நிலையம் ஒன்றினை அமைக்கப்படும்
என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
புதிதாக அமைய உள்ள விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டும் என தலைநகர வளர்ச்சி ஆணையம் ஆந்திர அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இறுதியில் பிரிக்கப்பட்டது. இதனையடுத்து ஐதராபாத் இரு மாநிலங்களுக்கும் 10 ஆண்டுகள் தலைநகராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு புதிய தலைநகரை நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்றன. இறுதியில் அமராவதியில் புதிய தலைநகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
புதிய தலைநகரை ஐதராபாத்தை விட மிகவும் சிறப்பான ஒரு நகரமாக உருவாக்கும் முனைப்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை முடுக்கிவிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக புதிய தலைநகர் அமராவதியின் எல்லைக்குள் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ஆந்திர அரசு மேற்கொண்டுள்ளது. புதிய ஆந்திர மாநிலத்தில் புதிதாக இரண்டு நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக அமராவதி ஆற்றங்கரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தடிகொண்டா பகுதியில் புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அமராவதியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்தினையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் முயற்சியிலும் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது.
விமான நிலையம் அமைப்பது தொடர்பான ஆய்வு பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அம்மாநில மந்திரி நாராயணா தெரிவித்துள்ளார். மேலும் புதிய விமான நிலையத்திற்காக 7,500 ஏக்கர் பரப்பளவிலான நிலமும் கையகப்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.

ad

ad