புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2015

கால்பந்தாட்ட தேசிய அணியில் இடம்பிடித்த யாழ். மாவட்ட வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்

foot-jpg16வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட தேசிய அணியில் இடம்பிடித்த யாழ். மாவட்ட வீரர்கள் நேற்றையதினம் கௌரவிக்கப்பட்டுள்ளனர். 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தேசியமட்ட கால்பந்தாட்டத்தொடர் அண்மையில் பங்களாதேஷpல் நடைபெற்றது. இந்தத் தொடருக்கான இலங்கை தேசிய அணியில் யாழ். மத்திய கல்லூரியின் றே.றேம்சன் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் கே.சாந்தன் இருவரும் இடம்பிடித்திருந்தனர்.
புனித நீக்கிலார் திருவிழாவை முன்னிட்டு நாவாந்துறை சென்.நீக்கிலஸ் சனசமூக நிலையத்தால் இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் கௌரவிக்கப்பட்டுள்ளனர். கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்களில் றேம்சன் நாவாந்துறை சென்.நிக்கிலஸ் விளையாட்டுக் கழகத்ததை பிரதிநிதித்துவம் செய்கின்றார். சாந்தன்
குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்த்தவர்.
நாவாந்துறை சென்.நீக்கிலஸ் சனசமூக நிலையத்தின் தலைவர் ஆ.தயான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாவாந்துறை பங்குதந்தை சோபன் கலந்துகொண்டார்.
விருந்தினர்களாக யாழ். மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி மோகனதாஸ், யாழ். கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் எஸ்.அன்ரனிப்பிள்ளை, வடமாகாண சபை உறுப்பினரும் விளையாட்டுத்துறை இணைப்பளருமான இ.ஆனல்ட் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜெ-84 கிராம சேவகர் சர்வேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்

ad

ad