புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் கிஷாநாதன் தாயக மக்களுக்கு உதவிகளை வழங்கினார்

.சுவிஸர்லாந்து செங்காலன் அல்சட்டான் பகுதியில் வாழ்த்துவரும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேரந்த கமலதாசன் கிஷாநாதன் தனது
3வது பிறந்தநாள் நிகழ்வின் போது பல ஆயிரம் ரூபா பெறுமதியான பெருள்களை தாயக மக்களுக்கு வழங்கினார்.
அத்துடன் 5 குடும்பங்களுக்கு சுயதொழில் செய்ய கால்நடைகளையும் வழங்கியுள்ளார்.
தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதரத்துக்காக போராடிவரும் எமது மக்களுக்கு புலம் பெயர்ந்து வாழ்த்துவரும் உறவுகள் உதவிகளை வழங்கிவரும் போதும் இன்றுவரை வறுமை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.
இந்த நிலையை மற்றவேண்டும் என்றால் புலம்பெயர்நாடுகளில் வாழும் இளம்தலைமுறைபிள்ளைகளுக்கு தாயக மக்களுக்கு உதவிசெய்யும் மனநிலையை அதிகாரிக்க கமலதாசன் போன்ற தந்தைபோன்று அனைவரும் முன்வரவேண்டும் உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் திருமணநிகழ்வு மற்றும் வீட்டில் நடைபெறும் மங்களமான நிகழ்வுகளின் போது தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவேண்டிய கடமைப்பாடு அனைத்து தமிழ்மக்களுக்கும் உள்ளது எனவே அனைந்து தமிழ் மக்களும் உதவிசெய்யும் மனப்பாங்கை மேலும் அதிகாரித்தால் தாயகத்தில் மிகவிரைவாக வறுமையை ஒழிக்கமுடியும் இன்றைய தினம் கிளிநொச்சியில் வைத்து 5 குடும்பங்களுக்கு சுயதொழில் செய்ய கால் நடைகளும் 50 குடும்பங்களுக்கு உலஉணவுப்பொருள்களும் வழங்கப்படுகின்றது.
அத்துடன் கமலதாசன் கிஷாநாதன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்துடன் ஒவ்வொரு பிறந்தநாள் நிகழ்வின் போது தாயகமககளுக்கு உதவிசெய்ய இருப்பதாக தந்தையார் தெரிவித்துள்ளார்
இந்த நிகழ்வு இன்று பி ப 2-30 மணிக்கு வன்னி நாவல்குளம் பகுதியில் வழிகாட்டும் உயிர்ப் பூக்கள் அமைப்பின் தலைவர் பா துஷ்சியந்தன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் வன்னி மாவட்ட வடமாகாண சபையின் உறுப்பினர் மா.தியாகராசா கலந்துகொண்டர் அத்துடன் அமைப்பின் உறுப்பினர் தங்கராசா மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்துகொண்டனார்

ad

ad