புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2015

பாரீஸில் பதற்றம்: வெடி பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்திருந்த பெண் அதிரடி கைது


பிரான்ஸில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக வீட்டில் வெடிப்பொருட்களை பதுக்கிவைத்திருந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். 
பிரான்ஸின் மொண்ட்பில்லர்(Montpellier) பகுதியை சேர்ந்த கேம்லி என்பவரின் வீட்டில் பாரீஸ் தீவிரவாதி தடுப்பு பொலிசார் திடீர் சோதனை நடத்தினர்.
அவரது கணணியை சோதனை செய்தபோது அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிரச்சாரங்கள் அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பிணையக்கைதிகளின் தலையை தீவிரவாதிகள் வெட்டும் காட்சிகளை பார்ப்பதிலும் தீவிரவாத குழுக்களின் பத்திரிகைகளை படிப்பதிலுமே அவர் அதிகளவு நேரத்தை செலவழித்ததும் தெரியவந்தது.
அத்துடன் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் மெல்லிய இரும்பு பையில் வெடிமருந்து பொருட்களை மறைத்து வைத்திருந்ததையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.
மேலும் தனது நெருங்கிய நண்பர்களிடம் தனது கணவருடன் சேர்ந்து சிரியா செல்ல வேண்டும் என்றும் தியாகியாக மரணமடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் தற்கொலை தாக்குதல் தொடர்பான ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கேம்லி மற்றும் அவரது கணவரையும் பொலிசார் கைது செய்தனர். தீவிரவாத தடுப்பு பொலிசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad