புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2015

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர் தனக்குத் தானே தீமூட்டிய நிலையில் பொலிஸில் சரண்

தாபரிப்பு வழக்கில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குள் தனக்குத் தானே தீமூட்டிய நிலையில் புகுந்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர் .
இச்சம்பவம் நேற்று மாலை வடமராட்சியில்  இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் புனித நகர் கற்கோவளத்தைச் சேர்ந்த துரைராசா பிரதீபன் (வயது-30)  என்பவரே தீயில் எரிந்து எரிகாயங்களுக்குள்ளானார்.
குறித்த நபர் தாபரிப்பு வழக்கில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொலிஸாரிடம் சரணடையாது ஒளிந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தனக்குத் தானே தீமூட்டி எரிந்த நிலையில் பொலிஸ் நிலையத்திற்குள் திடீரென இவர் புகுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


தீக்காயங்களுடன் பாதுகாப்பாக மீட்ட குறித்த நபரை பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவத்தால் நெல்லியடி பொலிஸ் நிலைய பகுதியில் நேற்று சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர் தனக்குத் தானே தீமூட்டிய நிலையில் பொலிஸில் சரண்

ad

ad