புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2015

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்கும் நிலைவராது என விளாடிமீர் புதின் நம்பிக்கை


சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ரஷியாவிற்கு, அணு ஆயுதங்களை பிரயோகிக்கும் நிலைவராது என அதிபர் விளாடிமீர் புதின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 

ஐ.எஸ். தீவிரவாதிகள் 

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக எழுந்து உள்ளனர். அவர்கள், தங்கள் பிடியில் சிக்கியவர்களை கொலை செய்த விதமும், பெண்களை அடிமைபடுத்திய விதமும் அவர்களுடைய கோரமுகத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்டியது. 

இதனையடுத்து சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வான்தாக்குதல்களை அரங்கேற்றியது.

சிரியாவில் ரஷியா தாக்குதல்

சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

சிரியாவில் ரஷியா தனிப்பட்ட முறையில் அங்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதியில் இருந்து போர் விமானங்களை கொண்டு குண்டு வீச்சு நடத்தி வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிற ரஷியா, இடைஇடையே அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களையும் தாக்கி வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின. 

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதில் மட்டுமே ரஷியா ஈடுபட வேண்டும் என்றும் அந்நாடுகள் வலியுறுத்தியது.

அதிரடி தாக்குதல்

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 125-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர். 

இதனையடுத்து சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வலுப்படுத்தப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா விமானப்படைகள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஜெர்மனியும் கைகோர்த்தது. 

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலையை குறிவைத்து உலக நாடுகளின் படைகள் அதிரடியாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. 

கள்ளச்சந்தையின் மீது குறி
 
இதற்கிடையே ரஷியாவின் விமானப்படை விமானத்தை சிரியா எல்லையில் துருக்கி விமானப்பட்டை சுட்டு வீழ்த்தியதை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. 

இந்நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் எடுக்கும் ஆயில் துருக்கியில் கள்ளச்சந்தையில் விற்கப்படும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பொருளாதார வளத்தை சீர்குலைக்கும் பணியை ரஷியா கையில் எடுத்தது. 

சிரியா மற்றும் ஈராக்கில் எடுக்கப்படும் எண்ணெய் துருக்கியை நோக்கி செல்லும் போது ஆயில் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது. ஆயுதங்களை குவித்தது. ஆயுதம் தாங்கிய போர்கப்பல்களையும் சிரியா எல்லைக்கு ரஷியா அனுப்பியது. 

மத்திய தரைக்கடலில் இருந்து நீர்மூழ்கிக்கப்பல் மூலமாக ரஷியா முதன்முதலாக வான்தாக்குதல் நடத்தியது. டான் ராஸ்டாவ் நீர்மூழ்கி கப்பலில் இருந்து காலிபர் குரூஸ் ஏவுகணையைக் கொண்டு, ராக்கா நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆயுத கிடங்கு, எண்ணெய் ஆலைகள் நாசம்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து நீர்மூழ்கி கப்பலில் இருந்து காலிபர் குரூஸ் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது. அத்துடன் ’டூ-22’ ரக போர் விமானங்கள் மூலமாகவும் கடந்த 3 நாட்களில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.

ரஷியாவின் வான்தாக்-குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆயுதக்கிடங்கு துவம்சம் செய்யப்பட்டது. பீரங்கி குண்டுகள் தயாரிக்கிற ஆலையும் தகர்க்கப்பட்டது. எண்ணெய் ஆலைகளும் நாசம் செய்யப்பட்டது. 

இந்த தாக்குதல்கள் தொடர்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு தெரிவித்து விட்டோம். என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

விளாடிமீர் புதின் 

சிரியாவில் நடத்தியுள்ள தாக்குதல்கள் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேசுகையில், ‘புதிய குரூஸ் ஏவுகணை மூலமாக மரபு ரீதியிலான வெடிகுண்டுகளையும், அணுக்குண்டுகளையும் கொண்டு தாக்குதல் நடத்த முடியும். 

ஆனால் அணுக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த வேண்டிய நிலை வராது’ என தெரிவித்தார்.

‘இயற்கையாகவே, தீவிரவாதிகளுடன் போரிடும் போது இது(அணு ஆயுதம்) தேவையில்லை, இது தேவைப்படாது என்றே நானும் நினைக்கிறேன்,” என்று கூறிஉள்ளார்.

ad

ad