புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2015

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு ‘சிக்னலை’ துண்டிக்க தடை


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு ‘சிக்னலை’ துண்டிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–   ‘’தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனம், தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையை வழங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் 70 சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு, மாதம் ரூ.70–க்கு 100 சேனல்கள் வழங்கப்படுகின்றன. சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் டிஜிட்டல் மூலம் ஒளிபரப்பு செய்யும் நடவடிக்கையை அரசு கேபிள் டிவி நிறுவனம் எடுத்து வருகிறது. அதற்கான உரிமம் கோரி மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. ‘செட்டாப் பாக்ஸ்’ வாங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் ஒளிபரப்புக்கான உரிமம் கேட்ட விண்ணப்பம் தற்போது நிலுவையில் உள்ளது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து, டிஜிட்டல் ஒளிபரப்புக்கான உரிமத்தை வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களை, தமிழக எம்.பி.க்கள் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி, சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவிடடும், இதுவரை அந்த உரிமம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

 இந்த உரிமத்தை பெறுவதற்கு எங்கள் நிறுவனத்துக்கு உரிமையும், தகுதியும் உள்ளது.  ஆனால், எங்கள் நிறுவனத்துக்கு பின்னர் விண்ணப்பம் செய்த 326 நிறுவனங்களுக்கு தற்காலிக டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை வழங்கியுள்ளது. ஆனால், எங்களது விண்ணப்பம் மட்டும் நிலுவையிலேயே வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையில் பாகுபாடு உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல தடவை கடிதங்கள் எழுதி முறையிட்டுள்ளார். அதன்பின்னரும், தற்காலிக உரிமம் வழங்குவதற்கான கோரிக்கையை கூட மத்திய அரசு பரிசீலிக்காமல் உள்ளது.

இதற்கிடையில், வருகிற டிசம்பர் 31–ந் தேதிக்குள் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெறவில்லை என்றால், கேபிள் டி.வி.க்கான சிக்னல் துண்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவிக்கான சிக்னலை துண்டிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும். தற்காலிக உரிமம் வழங்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்’’என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்காக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, சிறப்பு அரசு வக்கீல் அப்துல் சலீம், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

இந்த மனுவுக்கு மத்திய அரசிடம் கருத்தை கேட்டு தெரிவிக்க மத்திய அரசு வக்கீல்கள் கால அவகாசம் கேட்டார்கள். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 6–ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, ‘அதுவரை தற்போதைய நிலையே தொடரவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கான ஒளிபரப்பு சிக்னலை துண்டிக்க மத்திய அரசுக்கு தடை ஏற்பட்டுள்ளது.

ad

ad