புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2015

தமிழ்நாடே வேண்டாம்; எங்களை விட்டுவிடுங்கள் - எங்காவது போய்விடுகிறோம் : கண்ணீரும் கதறலுமாக கூறும் சிம்பு தாயார்

 ( வீடியோ )


நடிகர் சிம்பு - அனிருத் கூட்டணியில் சிம்பு பாடிய 'பீப் பாடல்' இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.  இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சிம்புவை கைது செய்ய காவல்துறை முயற்சிப்பதாகவும், சிம்பு தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்.

இந்நிலையில்,  தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனது மகனின் 'பீப்' பாடல் குறித்து டி.ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கண்ணீரும், கதறலுமாக பேசும் வீடியோ குரல் டிவியில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோ பதிவில், ’’சிம்பு அப்படி என்ன குற்றம் பண்ணிவிட்டார்? பொதுநிகழ்ச்சியிலோ, படங்களிலோ, பேட்டியிலோ ஏதாவது சொல்லியிருக்கிறாரா? எதுவுமே இல்லை. அவரோ சின்ன பையன், அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. வீட்டில் நண்பர்களுடன் விளையாட்டாக பண்ணிய பாடல், அதுவும் 'பீப்' போடப்பட்டு இறுதியில் தேவையில்லை என்று தூக்கிப் போடப்பட்ட பாடல். அதை என்னமோ பெரிய குற்றம் பண்ணிவிட்டது போல, எந்த நேரமும் வீட்டின் முன்பு போலீஸ் இருக்கிறது. 24 மணி நேரமும் வீட்டின் முன்பு கேமிரா கையுமாக ஆட்கள் இருந்தால் எங்களுக்கு என்ன நிம்மதி இருக்கிறது. சொந்த வீட்டின் வாசலில் என்னால் கோலம் போட முடியவில்லை. அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். போலீஸ் தேடும் அளவுக்கு சிம்பு என்ன தவறு பண்ணினார்.  அப்படியே தேடினாலும் தமிழ்நாட்டை விட்டோ, இந்தியாவை விட்டோ எங்கேயும் ஒடவில்லை. உங்களுக்கு என் பையன் தானே வேண்டும், எந்த போலீஸிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கிறோம் எடுத்துக் கொள்ளுங்கள்.

என்ன நாடு இது? தனிப்பட்ட வீட்டிற்குள் தனியுரிமை இல்லை என்றால் ஏன் இங்கு இருக்க வேண்டும். எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை யாருமே சொல்லமாட்டேன் என்கிறார்கள். இது திருடப்பட்ட ஒரு பாடல், தூக்கி எறியப்பட்ட ஒரு பாடல், 'பீப்' சத்தம் போட்டு மறைக்கப்பட்ட ஒரு பாடல். அப்படியிருக்கும் போது உங்களுக்கு என்ன தான் வேண்டும். என் பையனோட உயிர் வேண்டுமா.. எடுத்துக் கொள்ளுங்கள்.. இல்லையென்றால் அந்த பையனை வளர்த்த என்னோட உயிர் வேண்டுமா.. எடுத்துக் கொள்ளுங்கள். என்ன தான் பிரச்சினை உங்களுக்கு?

சிலம்பரசனை தூக்கில் போட வேண்டும் என்கிறார்கள். அந்த பையன் தூக்கில் போடும் அளவுக்கு என்னங்க பண்ணிட்டான். அந்த பையனை வளர்த்தவள் நான். என்னை தூக்கில் போடுங்கள். என் மகன் தவறு பண்ணியிருந்தால், என்னை தூக்கில் போடுங்கள். நான் வருகிறேன். வீட்டில் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, வெளியே வர முடியவில்லை. எந்நேரம் பார்த்தாலும் கேமிரா கையுமாகவே இருக்கிறார்கள். என்னங்க நாடு இது? எனக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் எங்கேயாவது சென்று விடுகிறோம்.

சிம்பு ஒரு சாதாரண நடிகன். பத்து நடிகரோடு அவரும் ஒரு நடிகர். இப்படி கிழி கிழி என்று கிழிப்பதற்கு அவர் என்ன பண்ணிவிட்டார். எங்கள் குடும்பத்தோட நிம்மதியே போய்விட்டது.
தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பொழப்பைத் தேடிக் கொள்கிறோம். எங்களை வாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கண்ணீரும், கதறலும், ஆவேசமுமாக பேசியிருக்கிறார்.

 

ad

ad