புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2015

ஆந்திர பிரதேச சட்டபேரவையில் இருந்து ரோஜா இடை நீக்கம்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் கண்டனம்

ஆந்திர சட்டசபையில் இருந்து நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவு மான ரோஜா 1 ஆண்டு சஸ்பெண்ட் செய்யபட்டதையொட்டி
இந்த கூட்டத் தொடர் மூலம் சட்டசபையை புறக்கணிப்பதாக கூறி ஜெகன்மோகன் ரெட்டியும், உறுப்பினர்களும் சட்டசபையில் இருந்து வெளியேறினார்கள்.

ஆந்திர சட்டசபையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை அவதூறாக பேசியதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா 1 ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

ரோஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்தார்.

காலை 9 மணிக்கு ஆந்திர சட்டசபை கூட்டம் தொடங்கியது. ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வருகை புரிந்தனர்.

 அப்போது ஜெகன் மோகன் ரெட்டி சட்டசபையில் பேசியதாவது:–

ரோஜாவை 1 ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டது சட்டமன்ற விதிமுறைக்கு மாறானது. முதல்–மந்திரியை விமர்சிக்க உறுப்பினருக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் சபாநாயகரை ரோஜா விமர்சிக்கவில்லை. அப்படியிருக்க அவர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பேசினார்.

ரோஜா மீதான நடவடிக்கையில் மாற்றம் இல்லை என்று மந்திரி எனமலுராம கிருஷ்ணலு தெரிவித்தார்.

இதனால் இந்த கூட்டத் தொடர் மூலம் சபையை புறக்கணிப்பதாக கூறி ஜெகன்மோகன் ரெட்டியும், மற்ற உறுப்பினர்களும் அவையையில் இருந்து வெளியேறினார்கள்.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆந்திர சட்டசபை கூட்ட தொடர் நாளையுடன் முடிவடைகிறது.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவருக்கு சந்திரபாபு நாயுடு  மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ad

ad