புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2015

இராணுவம் பிடித்துச் சென்ற இரு மகன்களையும் இன்றுவரை காணவில்லை : தாயார் கண்ணீர் மல்க யாழில் சாட்சியம்

இராணுவத்தினர் எனது இரு மகன்களையும் பிடித்துச் சென்று இன்று வரை தகவல் எதுவும் தெரியாது என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு முன்னால் தாயொருவர் சாட்சியமளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 1996ஆம் ஆண்டு ஜீன் மாதம் மூத்த மகனான கருப்பன் பாலகிருஸ்ணன் என்பவரை மணியந்தோட்டத்தில் வைத்து இராணுவம் பிடித்துச் சென்றது. இதனை இவரின் சித்தப்பா நேரில் கண்டுள்ளார். அவர் சாட்சியமளிக்க எங்கும் போக தயார் என்றும் கூறியிருக்கிறார்.

அதேபோல் 1996ஆம் ஆண்டு ஜீலை மாதம் கடற்தொழிலில் ஈடுபட்டு வீடு திரும்பும் வழியில் எனது இளைய மகன் கருப்பன் சுரேஸ் கொழும்புத் துறையில் வைத்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டதாகவும் குறித்த பகுதியால் சென்றவர்கள் நேரில் பார்த்ததாக எனக்கு தெரிவித்தனர்.

 இரு மகன்களையும் இராணுவ முகாம்கள் எல்லாம் தேடி அலைந்தோம் ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இன்று வரை அவர்கள் பற்றி எதுவும் எமக்கு தெரியாது.

எமக்கு எந்தவிதமான நஸ்ட ஈடுகளும் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வந்தால் மட்டும் போதும். கடவுளை நம்பிக் கொண்டு இருமகன்களும் வருவார் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்று தாயார் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

ad

ad