புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2015

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொறு சந்தேக நபர் கைது



புங்குடு தீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொறு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வித்தியாவின் வீட்டிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வித்தியாவின் சகோதரர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதி மன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதாக எமது அலுவலக செய்தியாளர் கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் புங்குடு தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது  மேலும் ஒருவர்  கைது செய்யபப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேக நபரை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் போது குறித்த சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு அவர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டதரணி கோரிக்கை விடுத்துள்ளார்

அத்துடன், சந்தேக நபர் மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான மருத்துவ அறிக்கைகள் கடந்த 1997 ஆம் ஆண்டு இடம்பெற்ற இடம்பெயர்வின் போது காணாமல் போயுள்ளதாகவும் சட்டத்தரணி நீதி மன்றத்தில் அறிவித்திருந்ததாக எமது செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.

எனினும், சட்டத்தரணியின் கோரிக்கையினை ஏற்க மறுத்த நீதிபதி குறித்த சந்தேக நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளாதாக அவர் கூறினார்.

இதேவேளை இந்த கொலை வழக்கின் 5ஆவது மற்றும் 6ஆவது சந்தேக நபர்களுடன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரையும் விசாரணைக்குட்படுத்த அனுமதி கோரி குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நீதிபதி குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அத்துடன் குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்ததார்.

ad

ad