புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

நீதிமன்ற உத்தரவால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார் விஜயகாந்த்: ஏமாற்றத்துடன் திரும்பிய போலீசார்


தஞ்சாவூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக தஞ்சை கிழக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதில் விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த புகாரில் தன்னை கைது செய்யக்கூடாது என்று விஜயகாந்த் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, வரும் 5ஆம் தேதி வரை விஜயகாந்த்தை கைது செய்யக் கூடாது என்று இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

இதனிடையே நேற்று இரவு பாண்டிச்சேரியில் தங்கி இன்று கடலூர் வர திட்டமிட்டிருந்த விஜயகாந்த்தை கைது செய்வதற்காக 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் கடலூர் விரைந்தனர். அப்போது கோர்ட்டில் முன்ஜாமீன் மனு விஜயகாந்த் தாக்கல் செய்திருப்பதை அறிந்த அவர்கள், தீர்ப்பு வரும் வரை கடலூரில் இருப்பதா, இல்லை திரும்பிவிடலாமா என்று குழப்பத்தில் இருந்தனர். இடைக்கால ஜாமீன் என தீர்ப்பு வந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

ad

ad