புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

நியூஸிலாந்து அணியின் சாதனை

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்
போட்டி டனிடனில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில்
* டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்து இருப்பது இது 3-வது முறையாகும்.
* இந்த ஆண்டில் நியூசிலாந்து அணி வீரர் கனே வில்லியம்சன் சர்வதேச போட்டிகளில் 19-வது முறையாக ஒரு இன்னிங்சில் 50 ஓட்டங்களுக்கு மேல் அடித்து இருக்கிறார்.
இங்கிலாந்து வீரர் ஜோரூட் 20 முறை ஒரு இன்னிங்சில் 50 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்து முதலிடத்தில் இருக்கிறார்.
* நாணயச்சுழற்சியில்வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. டெஸ்ட் போட்டியில்நாணயச்சுழற்சியில் வென்ற அணி நியூசிலாந்தில் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்து இருப்பது தொடர்ந்து 13-வது முறையாக அரங்கேறி இருக்கிறது.
* நியூசிலாந்து அணியின் தலைவர் பிரன்டன் மெக்கல்லம் நேற்று தனது 98-வது டெஸ்டில் விளையாடினார்.
இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் இருந்து இடைவிடாமல் 98 டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென் ஆபிரிக்க வீரர் டிவில்லியர்சின் சாதனையை சமன் செய்தார்.
* நியூசிலாந்து அணியின் தலைவர் பிரன்டன் மெக்கலம் ஒரு சிக்சர் தூக்கினார். இது இலங்கை அணிக்கு எதிரான பிரன்டன் மெக்கலம் அடித்த 19-வது சிக்சராகும். இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் (18 சிக்சர்) அடித்து இருந்த இந்திய வீரர் நவ்ஜோத்சிங் சித்துவின் சாதனையை தகர்த்தார்.

ad

ad