புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2015

முறைதவறிய உறவு/கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்கு உள்ளாக்கப்படவிருந்த இலங்கைப் பெண்ணின் வழக்கு மீள் விசாரணை

முறைதவறிய உறவு காரணமாக கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்கு உள்ளாக்கப்படவிருந்த இலங்கைப் பெண்ணின் வழக்கு மீள விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
குறித்த பெண்ணுக்கு கருணை காட்டுமாறு இலங்கை முஸ்லிம் அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று சவூதி மன்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கல்லெறிந்து கொல்லப்படவிருந்த பெண்ணின் தண்டனையை ரத்துச் செய்யுமாறு இலங்கை முஸ்லிம் கவுன்சிலும், குறித்த பெண்ணுக்கு ஷரீஆ சட்டம் பொருந்தி வராது என்று கலாநிதி றியாஸின் தலைமையில் இயங்கும் தென்கிழக்கிலங்கை முஸ்லிம் வாலிபர் சம்மேளனமும் சவூதி அரசாங்கத்துக்கு தனித்தனியாக கடிதங்களை அனுப்பியிருந்தன.
இந்நிலையில் குறித்த பெண் தொடர்பான வழக்கு மீள விசாரிக்கப்படவுள்ளதுடன், அதுவரை அவருக்கு எதிரான தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் இளவரசி தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனுடன் திருமணத்திற்கு முன்னர் கணவன்-மனைவி போன்று சுற்றித்திரிந்த காரணத்துக்காக 1978ம் ஆண்டு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட சவூதி அரசாங்க நீதிமன்றம் விதித்த தண்டனையொன்றை மீள்பரிசீலனை செய்வதற்கு முன்வந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
அந்த வகையில் இது இலங்கைக்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என்று வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்

ad

ad