புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2015

அடைமழை விடாது! விமானம் பறக்கும்! சென்னையில் தற்காலிக விமான நிலையம் தயார்


தொடர்ச்சியாக கொட்டிவரும் அடைமழை காரணமாக சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதை அடுத்து  ராஜாளி கடற்படை
விமான தளம் தற்காலிகமாக பயணிகள் விமான நிலையமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பஸ் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோல், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஓடுபாதைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், விமான நிலையத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கும் அபாயம் உள்ளது.
எனவே, சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் திகதி வரையில் மூடப்படுவதாக இந்திய விமான ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமான தளம் தற்காலிகமாக பயணிகள் விமான நிலையமாக செயல்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் பயணிகளின் சிரமத்தை சிறிதளவேனும் குறைக்க முடியும். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி மத்திய கடற்படையின் பயிற்சித் தளம் ஆசியாவிலேயே மிகப் பெரியது. இந்தியாவிலேயே மிகப் பெரிய ஹெலிகாப்டர் விமானிகள் பயிற்சி பள்ளி செயற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad