புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2015

அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய பெண் தீவிரவாதி, தகவல்களை அழிக்க பாகிஸ்தான் முயற்சி

Pakistani-security
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்பெர்னார்டினோ நகரில் ஒரு தொண்டு நிறுவன ஊழியர்களின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
மீது ஒரு தம்பதி கடந்த 2–ந் தேதி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 14 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்ற சயீத் ரிஸ்வான் பாரூக் (வயது 28) அவருடைய மனைவி தஸ்பீன் மாலிக்(27) இருவரையும் போலீசார் பின்னர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
பாரூக் சட்டைப் பையில் வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மாலிக் பார்மசி படிப்பில் பட்டம் பெற்றவர்.பாகிஸ்தானின் மத்திய நகரமான முல்தான் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில்
அவருடைய மனைவி தஸ்பீன் மாலிக் பாகிஸ்தான் நாட்டில் பிறந்தவர் என்றும் பின்னர் சவுதி அரேபியாவில் வாழ்ந்து உள்ளார் அங்கிருந்து அமெரிக்கா வந்து உள்ளனர். என்பதையும் அவர்கள் உறுதி செய்தனர். இருவரும் அண்மையில்தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
போலீசார் என்கவுன்ட்டர் நடத்திய இடத்தில் தம்பதி பயன்படுத்திய காரில் இருந்து 2 அதிநவீன எந்திர துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், குண்டு துளைக்காத உடைகள், கருப்பு நிற அங்கிகள் ஆகியவற்றையும் கைப்பற்றினர்.
விருந்து அரங்கில் அவர்கள் 150 ரவுண்டுகள் சுட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
பாகிஸ்தானில் உள்ள சிறுசிறு தீவிரவாத குழுக்களுடன் இருவரும் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் அமெரிக்க புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே நடத்தப்பட்டது நிச்சயமாக தீவிரவாத தாக்குதல்தான் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தஸ்பீன் மாலிக்கின் பின்னணி குறித்து வெளியான அறிக்கையை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாலிக்குடன் வேலைபார்த்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் 3 பேர் கூறும் போது தங்களை எந்த ஊடகங்களுடனும் பேசகூடாது என பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.மேலும் அவரது பின்னணி குறித்து விசாரிப்பதை நிறுத்த வேண்டும் என நிருபர்களிடம் கூறி உள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறும் போது இது ஒரு தவறான புரிந்தல் காரணமாக நிகழ்ந்தது ஆகும் என கூறி உள்ளது.

ad

ad