புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

புனர்வாழ்வு பெற்ற பட்டதாரிகளுடன் டெனிஸ்வரன் விசேட சந்திப்பு

புனர்வாழ்வு பெற்ற பட்டதாரிகளுக்கும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்த பட்டதாரிகளுடன் அமைச்சர் குருநகரில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிமனையில் இந்த சந்திப்பை மேற்கொண்டார்.
 
இந்த சந்திப்பின் போது குறித்த பட்டதாரிகள் யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதாலும், இன விடுதலைக்காக யுத்தத்தில் தம்மை ஈடுபடுத்தி இருந்தமையால் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டதாக தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
 
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து பின் புனர்வாழ்வுக்கு சென்று திரும்பிய பின்னர் தாம் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதாகவும், குறிப்பாக வடமாகாணம் முழுவதுமாக சுமார் 36 பட்டதாரிகள் இவ்வாறு புனர்வாழ்வு பெற்ற பின்னர் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தம்மை அரச சேவையில் உள்ளீர்ப்பு செய்து கொள்ளுமாறு பட்டதாரிகள் குறிப்பிட்டதாகவும், தாம் இவ்வாறானவர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு, அவர்களது சுய விபரக்கோவைகள், புனர்வாழ்வு பெற்ற பத்திரங்கள், பட்டத்திற்கான சான்றிதழ் என்பனவற்றை பிரதி செய்து தமது அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.  
 
எதிர்வரும் ஆண்டில் தனது அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களுக்கு உட்பட்ட வேலைத் திட்டங்களுக்கு தாம் அரச சேவையில் உள்ளீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இதற்கான வேலைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விசேட சந்திப்பில் அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad