புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி

4514
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 212 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா
அபார வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 10 ஆம் திகதி ஆரம்பித்து ஹோபார்ட்டில் நடைபெற்றுவந்தது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 114 ஓவர் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 583 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் வெளியேறியது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் சார்பில் வோக்ஸ் 269 ஓட்டங்களையும் மார்ஷ் 182 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் வாரிகன் 3 விக்கெட்களையும் காப்ரியல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 70 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றது. அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் பிராவோ 108 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் சார்பில் ஹசில்வூட் 4 விக்கெட்களையும், லியொன் 3 விக்கெட்களையும் சிடில் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஃப்லோஒன் முறையில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 36.3 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள இன்னிங்ஸ் மற்றும் 212 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றியை தனதாக்கியது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பிராத்வெய்ட் 94 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் பட்டின்சன் 5 விக்கெட்கைளயும் ஹசில்வூட் 3 விக்கெட்டையும் மார்ஷ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய வீரர் வோக்ஸ் தெரிவானார்.

ad

ad