புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2015

துயருற்றிருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை: செயல்முனைப்பில் அரசவையில் நிதியம்


இயற்கையின் கடும் சீற்றத்தினால் பேரிடரினை சந்தித்திருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வின் தொடக்க நாள் நிகழ்வின் இந்தோழமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தினை ஆட்கொண்ட கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாhல் உயிரிழந்தவர்களுக்கும்,
உயிர்மீட்கும் பணியின் போது உயிர்நீத்தவர்களுக்கும் என தமிழ உறவுகளுக்கு எல்லோருக்குமாக தனது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஒரு கணம் எழுந்து நின்று மௌனம் காத்து தனது கவலையினையும் தோழமையினைiயும் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழக இயற்கை பேரிடர் துயர் தணிப்பு நிதியம் எனும் பெயரில் செயற்திட்டமொன்று இந்த அவை அமர்வின் போது உருவாக்கப்பட்டிருந்ததோடு, குறியீடாக அரசவை பிரதிநிதிகள் மற்றும் ஆதாரவாளர்கள் இந்திய நாண மதிப்பில் இரண்டு லட்சங்களை பங்களித்திருந்தனர்.
தமிழக இயற்கை பேரிடர் துயர் தணிப்பு நிதியத்தில் பங்கெடுக்க விரும்பும் புலம்பெயர் மக்கள் பேய்பல் மூலமாக பங்களித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,
இதற்கென தனித்த இணையத்தளம் ஒன்று உருவாக்கப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஊடாக முதற்கட்டமாக இரண்டாயிரம் உணவுப் பொதிகள் வழங்குவதற்குரிய செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் நாள் அரசவை அமர்வில் விவாதம்
அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி எனும் தொனிப் பொருளிலில் முக்கிய விவாதம் இடம்பெற்று வருகின்றது. 
டிசெம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெறுகின்றது.
இடம்பெற்று வரும் இந்த முக்கிய விவாதத்தினை பேராசிரியர் சொர்ணராஜா அவர்கள் தலைமை தாங்கி நடத்துவதோடு, பேராசிரியர் குறூம் அவர்கள் முதன்மைக் கருத்துரையினை வழங்கி வருகின்றார்.
இதேவேளை இவ்அமர்வில் பங்கெடுத்துள்ள அனைத்துலக சட்டவாளர்களான டேவிட் மித்தாஸ், கரேன் பார்க்கர், ஜில் பிக்குவா, மற்றும் பேராசிரியர் பீற்றர் சார்க ஆகிய வளப் பெருமக்களும் விவாதத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.
உலக்தமிழர்களின் பலத்தினை கட்டியெழுப்புதல், ஈழத் தமிழர்களுக்கான அனைத்துலக நீதி ஆகிய விடயங்களை மையப்பொருளாக கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர்4 ) அமர்வு தொடங்கியிருந்தது.
புலம்பெயர் தேங்களில் இருந்தும் நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் இவ்விரு இடங்களிலும் கூடியுள்ளனர்.
தொடக்கநாள் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தொடக்கவுரை மற்றும் வளப்பெருமக்களின் சிறப்புரைகள் முதல் அமர்வில் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து இரண்டாம் அமர்வில் பிரதமர் பணிமனைச் செயலர்,அமைச்சர்கள் மற்றும் மையத்தலைவர்கள் தங்களது செயற்பாட்டு அறிக்கையினை அவையில் சமர்பித்திருந்தனர்.
அறிக்கைகள் தொடர்பிலான கேள்வி-பதில், கருத்துரைகள் விவாதங்கள் அவையில் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

ad

ad