புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2015

நாடு கடந்த தமிழீழ இராச்சியம் நியமித்திருந்த பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நீதவான்களை நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு


ஆறு வெளிநாட்டு நீதவான்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பரிசீலனை செய்வதற்கு ஆறு வெளிநாட்டு நீதவான்களுக்கு இவவ்ர்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தினால் இந்த ஆறு நீதவான்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் நீதவான்களை நாடு கடந்த தமிழீழ இராச்சியம் நியமித்திருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய இலங்கையில் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை அமுல்படுத்தப்படுகின்றதா என கண்காணிப்பதே நீதவான்களின் பணியாக அமைந்துள்ளது.
எனினும், இந்த ஆறு வெளிநாட்டு நீதவான்களும் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நியமிக்கப்பட்டுள்ள ஒரு நீதவான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டப் பிரிவில் கடமையாற்றியுள்ளார் என சிங்களப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, குறித்த நீதவான்கள் இலங்கை விஜயம் செய்ய உத்தியோகபூர்வமாக அனுமதி கோரினார்களா அவர்களுக்கான வீசா மறுக்கப்பட்டதா என்பது பற்றிய உத்தியோகபூர்வ விபரங்களை அரசாங்கத் தரப்போ அல்லது நாடு கடந்த தமிழீழ இராச்சிய தரப்போ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad