புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயக விரோதச் செயல் : சுமந்திரன்

தமிழ் மக்கள் பேரவையினை பின்கதவால் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயல் என தமிழ் தேசிய
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன்போது, தமிழ் மக்கள் பேரவை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. அமைப்பு உருவாக்கப்பட்டமைக்கான நிலைப்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் குறிப்பிட்டதாவது:-
‘தமிழ் மக்கள் பேரவையோ வேறு எந்த அமைப்புக்களையோ யாரும் உருவாக்கினால் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை கூற முடியாது. மக்கள் தங்களை ஒருங்கிணைத்து சில கருத்துக்களை பரிமாறிக் கொள்வது முக்கியமான ஒரு விடயம். தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக தொடர்ச்சியாக 6 வருடங்களாக மக்கள் தமது தேர்தல்கள் மூலம் மிகத் தெளிவான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள தீர்வு திட்டத்திற்கு தெளிவான விரிவான அரசியல் தீர்வு திட்டத்திற்கு தங்களுடைய ஆதரவினை ஒரிரு தேர்தல்களில் மட்டுமன்றி பல தேர்தல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். அந்த ஆணையை முன்னெடுக்கின்ற பொறுப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொண்டுள்ளார்கள். தொடர்ச்சியாக மக்களுடன் கலந்தாலோசித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அவற்றினைச் செய்வோம்.
கடந்த 3 மாதத்திற்கு முன்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட மிகத் தெட்டத்தெளிவாக மக்கள் தமது முடிவினைத் தெரிவித்துள்ளார்கள். அப்படியாக மக்களினால் நிராகரிக்கப்பட்ட தீர்வு திட்டங்களை இப்படியாக தமிழ் மக்கள் பேரவை என்ற போர்வையின் கீழ் பின் கதவால் கொண்டுவந்து முன்நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயலாக பார்க்கின்றோம்.
அப்படி அவர்கள் செய்யாவிட்டால், நல்லது. அவ்வாறு செய்ய முனைந்தால், அது ஜனநாயக விரோதச் செயல். அப்படி செய்கின்றார்கள் என்ற சந்தேகம் எழுவதற்கு முக்கியகாரணம். நடைபெற்று முடிந்த தேர்தலில் வித்தியாசமான நிலைப்பாடுகளை முன்நிறுத்தி போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர்கள் தமிழ் மக்கள் பேரவையில் முக்கியஸ்தர்களாக கடமையாற்றுகின்றார்கள்.’ என்றும் கூறினார்.

ad

ad