புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் என்னை சோகத்தில் ஆழ்த்தியது; பிரபல டென்னிஸ் வீரர் நடால் வருத்தம்

5 அணிகள் இடையிலான சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்தியன் ஏசஸ் அணி சார்பாக விளையாடி வரும் பிரபல சர்வதேச டென்னிஸ் வீரர் ரபெல் நடால் பிரபல ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-

ஐ.பி.டி.எல். போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சென்ற ஆண்டு நடந்த போட்டியில் என்னால் வரமுடியாதது குறித்து எனக்கு வருத்தம் இருந்தது. ஆனால், இந்த வருடம் வந்துவிட்டேன். இந்தியாவுக்கு வருவது எனக்கு பிடி்த்தமான ஒன்று. இங்கு அனந்தபூரில் எனக்கு சொந்தமாக பயிற்சி அகாடமி உள்ளது. அங்கிருந்து சில சிறுவர்கள் நாளை ஸ்டேடியத்திற்கு வர உள்ளனர். ரோஜர் பெடரருக்கு எதிராக விளையாடும் ஆட்டங்கள் எப்போதுமே ஸ்பெஷலாக இருக்கும். சென்னைக்கு இரண்டு முறை நான் இதுவரை வந்திருக்கிறேன். சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை பற்றி அறிந்ததும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. என்னை அது மிகவும் பாதித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ad

ad