புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2015

அரக்கோணத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்

மழை வெள்ளம் காரணமாக கடந்த இரு தினங்களாக நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து நாளை (4-ம் தேதி) அரக்கோணத்தில்
இருந்து மீண்டும் இயக்கப்பட உள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

வெள்ளம் காரணமாக நேற்று (2-ம் தேதி) சாலை, ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இன்று ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடற்கரையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், நிறுத்தப்பட்டிருந்த விமான சேவையும் நாளை (4-ம் தேதி) முதல் அரக்கோணத்தில் உள்ள கடற்படைக்கு சொந்தமான  ராஜாளி விமானத்தளத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் மகேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''மழை வெள்ளம் காரணமாக கடந்த இரு தினங்களாக சென்னையில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

அவர்களின் நலன் கருதி நாளை (4-ம் தேதி) முதல் சென்னை, அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமான தளத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படும். இரு தினங்கள் இந்த போக்குவரத்து நடைபெறும். தினமும் 6 விமானங்கள் இயக்கப்படும். இதற்கு கட்டணமாக ரூ.1000-த்திலிருந்து, ரூ.2 ஆயிரம் வரை வசூலிக்கப்படும்.

இரு தினங்களுக்கு பிறகும் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமான போக்குவரத்து தொடங்க இயலாத நிலை ஏற்பட்டால், அரக்கோணத்தில் இருந்து தொடர்ந்து விமானம் இயக்கப்படும். எனவே, பயணிகள் யாரும் கவலைப்பட வேண்டும். முண்டியடிக்க வேண்டாம்'' எனக் கூறியுள்ளார்.

ad

ad