புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2015

கிழக்கு மாகாண சுற்றுலா தளங்களுக்கான வழிகாட்டி குறிப்பேடு தயார்


கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு ஆசிய மன்றத்தின் உதவியில் கிழக்கு மாகாண சுற்றுலா தளங்களுக்கான வழிகாட்டி குறிப்பேடு தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு ஆசிய மன்றம் கிழக்கு மாகாண சபைக்கு உதவ முன்வந்துள்ளது.

இதன் பிரகாரம் இம்மாகாணத்திலுள்ள அம்பாறை,  மட்டக்களப்பு மற்றும்   திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சுற்றுலா தளங்களுக்கான வழிகாட்டி குறிப்பேடுகளின் 15,000 பிரதிகள் ஆசிய மன்றத்தினால் அச்சிடப்பட்டுள்ளன. இதன் ஒரு தொகுதியினை ஆசிய மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சுபாகரன்,  கிழக்கு மாகாண முதலமைச்சு   மற்றும் உள்ளூராட்சி,  சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸிடம் கையளித்துள்ளார்.

இது தொடர்பான நிகழ்வு கிழக்கு மாகாண சபை முதலமைச்சு அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஆசிய மன்றத்தின் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத்,  மாகாண அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ரி.தமிழ் செல்வன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படக்கூடிய சாத்தியம்

ad

ad