புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2015

கோத்தபாய தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ முன்வைத்த அடிப்படை உரிமை மீறல் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு குறித்த மனுவை நிராகரித்துள்ளது.
ரக்னா லங்கா நிறுவனம் குறித்து வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்கு கோத்தபாய ராஜபக்ஸ, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.
இதன் போதே மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மனுவை நிராகரித்த ஆணைக்குழு அது தொடர்பாக 22 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினையும் வழங்கியிருந்தது.
இதேவேளை தம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அதிகாரமும் கிடையாது என தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad