புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2015

தாம்பரம் காவல் நிலையத்தில் பயங்கரம்: போலீசார் கண் எதிரிலேயே மனைவியை கொன்றார் கணவன்



கடந்த சனிக்கிழமை கணபதி சபரிமலைக்கு சென்றார். மனைவி கவுரி, ‘‘நான் தனியாக வீட்டில் இருக்க முடியாது. சேலையூரில் உள்ள அக்கா வீட்டுக்கு செல்கிறேன்’’  என கூறிவிட்டு  அக்கா  வீட்டுக்கு சென்றுள்ளார்.  ஆனால் மாலை வரை கவுரி அங்கு செல்லவில்லை. உறவினர்கள் தேடிய போது  கவுரி வேறு ஒரு ஆணுடன்  தவறாக பழகியதாக தகவல் வந்தது. இதையடுத்து, கணபதி மலைக்கு செல்லாமல் பாதியிலேயே திரும்பினார். வீட்டுக்கு வந்த கணபதி, ‘‘இனி  நீ எனக்கு வேண்டாம்.  உனக்காக என் குடும்பத்தையே இழந்து உன்னுடன் வாழ்கிறேன். ஆனால், நீ எனக்கு துரோகம் செய்து விட்டாய்’’ என கூறி வீட்டை விட்டு துரத்தி விட்டார். பிறகு  மனைவியின்  உறவினர்கள் இருவரையும்  அழைத்து சமாதானம் செய்து வைத்தனர்.  சேர்ந்து வாழ்வதாக கூறிய கவுரி கழிவறை செல்வதாக கூறிவிட்டு  மாயமானாள்.

கணவன் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  எனவே, சேலையூர் போலீசில் மனைவி காணாமல் போனது தொடர்பாக கணபதி புகார்  செய்தார். இந்நிலையில், கவுரி தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். புகாரை பெற்ற போலீசார்  விசாரணைக்கு வரும்படி   கணபதியை அழைத்தனர். மதியம் 3 மணிக்கு காவல் நிலையத்திற்கு வந்தார் கணபதி. போலீசார் வெளியே காத்திருக்கும்படி கூறினர். வெளியே வந்த போது மனைவி  கவுரி உட்கார்ந்திருப்பதை கண்ட கணபதி, மனைவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் இருவரையும் கண்டித்து உட்காரும்படி கூறினர். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த கணபதி, தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரூ டிரைவரை கொண்டு பெண் போலீசார் முன்னிலையிலேயே கவுரியை சரமாரியாக  குத்தினார்.

படுகாயம் அடைந்து நிலைகுலைந்த கவுரி அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அங்கிருந்து தப்ப முயன்ற கணபதியை போலீசார் பொதுமக்கள்  உதவியுடன் மடக்கிப் பிடித்தனர். கவுரியை, குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து  விட்டதாக கூறினர். இது தொடர்பாக, தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் முன்னிலையில் நடந்த கொலை  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
.

ad

ad