புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2015

அதிமுகவுக்கு சளைக்காத திமுக: நிவாரண பொருட்களில் கருணாநிதி, ஸ்டாலின் படம் அச்சடித்து விநியோகம்!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரண
பொருட்களில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் படங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.


மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

சென்னையில் கொட்டித்தீர்த்த மழையால்,  மக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தன்னார்வ அமைப்பினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்த்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நிவாரண பொருட்களில் முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கரை ஓட்டி அதிமுகவினர் விநியோகம் செய்தனர். அத்தோடு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்களை வலுக்கட்டாயமாக அதிமுகவினர் கைப்பற்றி அதில் ஜெயலலிதா ஸ்டிக்கரை ஒட்டியதோடு, பல இடங்களில் அவற்றை பறித்து சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 


இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை திமுக தலைவர் கருணாநிதி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை நெடுஞ்செழியன் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கருணாநிதி சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் மற்றும் கோட்டூர்புரம் பாலம் ஆகிய பகுதிகளை சார்ந்த மக்களை சந்தித்த கருணாநிதி, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

அதிமுகவினரை மிஞ்சும் அளவுக்கு திமுகவினரும், கருணாநிதி, ஸ்டாலின் படங்களை நிவாரண பொருட்களில் அச்சடித்து விநியோகம் செய்தனர்.

நிவாரணப்பொருட்களிலும், பேருந்துகளிலும் ஜெ. ஸ்டிக்கர் ஒட்டியது கண்டனத்துக்குரியது: ஸ்டாலின்
 
தஞ்சாவூர்: நிவாரணப்பொருட்களிலும், சென்னை மாநகர பேருந்துகளிலும் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது கண்டனத்துக்குரியது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பயிர் சேதங்களை பார்வையிடுவதற்காக 7ம் தேதி தஞ்சை வந்த தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். இதையடுத்து, சேதமடைந்த பயிர்களை பார்வையிட செல்வதற்காக 8ம் தேதி காலையில் புறப்பட்ட அவர், பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது, ''மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.13 ஆயிரம் வழங்குவது போதாது என்று விவசாயிகள் குரல் எழுப்புகிறார்களே? என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதலிளித்த ஸ்டாலின், ''இதை போய் போயஸ் கார்டன், கொடநாடு, அங்கேயும் இல்லையென்றால் ஹெலிகாப்டரில் இறங்கும்போது கேளுங்கள்'' என்று பதிலளித்தார். மேலும், ''அனைத்து கட்சி குழு அமைத்து, நிவாரணம் அழைக்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து, திருவாரூர் செல்லும் வழியில் அம்மையப்பன் அருகே காவனூர் ஊராட்சி தாளைக்குடியில் பயிர் சேதங்களை பார்வையிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் வெள்ள நிவாரணப்பொருட்களிலும், சென்னை மாநகர பேருந்துகளிலும் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது கண்டனத்துக்குரியது. இஸ்ரோ விஞ்ஞானி சிவன் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என எச்சரித்தார். இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் விடுவதையே நிறுத்தி விட்டார்கள். ஆனால், தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்தான் பேரழிவுக்கு காரணம்.
நிவாரண பணிகள் முழுமையாக நடைபெறவில்லை, சுகாதார சீர்கேட்டினால் டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால், மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் 90 சதவீதம் நோய் பரவும் அபாயம் இல்லையென பொய்யான தகவலை சொல்லி வருகிறார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு ஒரு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரத்து 500 வழங்குவதாக அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்'' என்றார்.

பின்னர், நாகப்பட்டிணத்திலுள்ள செல்லூர், வேளாங்கண்ணி ஆகிய பகுதியில் மழை நீரினால் சூழப்பட்டிருந்த சுனாமி குடியிருப்புகளை பார்வையிட்டு, மீனவ குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது, 22 படகுகள் கடலுக்குள் மூழ்கி உள்ளது. அவற்றை மீட்கப்பட வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு, மத்திய அரசிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தார். 

ad

ad